இசைவு

தொடர்புக்கு

1800 425 1002

(கட்டணமில்லாத் தொலைபேசி)

இசைவு வழங்குதலில் தேர்வாணையத்தின் பங்கு

» பணி வரன்முறை

» பணி மாறுதல்

» பணி முதன்மை

» பதவி உயர்வு பட்டியல்

பணிகளை வரன்முறைப்படுத்த

  • தேர்வாணைய உள்ளீட்டெல்லைக்குள் வரும் தமிழ்நாடு தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள பதவிகளுக்கு கருணை அடிப்படையில் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டோரின் பணிகளை வரன்முறைப்படுத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒழுங்குமுறை விதிகள். 1954 இன் விதி 16(பி)யின் பிற்பகுதியின்படி தேர்வாணையத்தின் இசைவு வழங்குதல்.
  • தேர்வாணைய உள்ளீட்டெல்லைக்குள் தொகுப்பூதியத்தில் தற்காலிகப் பணியிலிருக்கும் இளநிலை உதவியாளர்கள். தட்டச்சர்களாகப் பணிபுரிபவர்களின் பணியினை அரசாணை நிலை எண் 248. வருவாய்த்துறை நாள் 23,3,1993 இன் படி வரன்முறைப்படுத்த தேர்வாணைய இசைவு வழங்குதல்.
  • 1991 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் திட்டத்தில் பணிபுரிந்து பணியிழப்புக்குள்ளாகி உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியினை வரன்முறைப்படுத்த தேர்வாணைய இசைவு வழங்குதல்.
  • சில கழகங்கள் அரசுத் துறைக்கு ஈர்த்துக் கொள்ளப்படும் நிலைகளில் அவற்றில் பணியாற்றும் நபர்களின் பணியினை வரன்முறைப்படுத்த தேர்வாணைய இசைவு வழங்குதல்.
  • 14.1.1980 மற்றும் அதற்கு முன்னர் கிராம அலுவலர்களாகப் பணியிலிருந்தோரை கிராம நிர்வாக அலுவலர் பதவியில் அரசாணையின்படி பணி வரன்முறைப்படுத்துதல்.

துறை/ அலகு மாறுதலில் செல்ல

  • ஒரு துறையிலிருந்து / அலகிலிருந்து மற்றொரு துறைக்கு/ அலகிற்கு மாறுதலில் செல்ல தனியரின் பொருட்டு தமிழ்நாடு அமைச்சுப்பணி விதிகளின் விதி 20(a) (iii) இன் படி தேர்வாணைய இசைவு வழங்குதல்.

பணிமூப்பு நிர்ணயம் செய்தல்

  • தேர்வாணையத்தால் நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்டோர் மற்றும் பதவி உயர்வு பெற்றோரிடையே பணிமூப்பு நிர்ணயம் செய்தல்.

தேர்ந்தோர் பட்டியல்

  • ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறைகளில் உள்ள அலுவலக உதவியாளர்கள், பதிவறை எழுத்தர்கள், இரவுக்காவலர்கள், ஊராட்சி உதவியாளர்கள் மற்றும் பிற கீழ்நிலைப் பதவிகளில் உள்ளோரை 10%, 20% இடஒதுக்கீட்டின்படி இளநிலை உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்குவதற்கான தேர்ந்தோர் பட்டியலுக்கு தேர்வாணைய இசைவு வழங்குதல்.
  • தமிழ்நாடு நகராட்சி பொதுப் பணியின் கீழ்வரும் நிலை- 1 மற்றும் 2 ஆக பணியாற்றும் நகராட்சிப் பணியாளர்களை நகராட்சி ஆணையர் தரம்- 2 ஆக பணிமாறுதல் மூலம் தெரிவு செய்தல்.