| 1 | 
கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு    வழங்கப்படுகிறது? | 
இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள்.  விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட    மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. | 
| 2 | 
கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம்    செய்யப்பட்டுள்ளதா? | 
ஆம்,  அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும். | 
| 3 | 
கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்த    பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது? | 
தற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் - 3 மற்றும் தலைமைச் செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. | 
| 4 | 
இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம் பெற்றுள்ளார்,  அவருக்கு கருணையடிப்படையில்    உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படுமா? | 
உதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது,  இளநிலை உதவியாளர் பதவி    வழங்கப்படும். | 
| 5 | 
இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்கள்    கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவது அவர்களின் சட்டபூர்வ உரிமையா? | 
இல்லை. இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில் இருக்கிறது என, வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, பணி நியமனம் கோரும்    விண்ணப்பத்துடன் மற்ற சான்றாவணங்களுடன்    சமர்ப்பித்தால் தான், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க இயலும். | 
| 6 | 
கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்? | 
இறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் அலுவலர் மூலம் நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். | 
| 7 | 
கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற எந்தெந்த    சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்? | 
- கருணை அடிப்படையில் பணி    நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின்    கணவரின் / மனைவியின் விண்ணப்பக்    கடிதம்.
 
- கருணை அடிப்படையில் பணி    நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின்    வாரிசுதாரரான விண்ணப்பதாரரின் விண்ணப்பக் கடிதம்.
 
- இறந்த அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ். 
 
- இறந்த அரசு ஊழியரின் வாரிசுச்    சான்றிதழ். 
 
- இறந்த அரசு ஊழியரின் இதர வாரிசுதாரர்களின்    மறுப்பின்மைச் சான்றிதழ்கள்.
 
- நிர்ணயிக்கப்பட்ட கல்வி    மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்கள்.
 
- கல்வி மற்றும் தொழில்    நுட்பக் கல்விச் சான்றிதழ்களின் மெய்த்தன்மைக் கடிதம்.
 
- வட்டாட்சியாரிடமிருந்து பெறப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழ். 
 
- இறந்த அரசு ஊழியரின் மனைவி பணிநியமனம் கோரினால் அவர் மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்று.
 
  | 
| 8 | 
கருணை அடிப்படையில்    பணிநியமனம் கோரி விண்ணப்பித்து    பணி நியமனம் பெற  நிர்ணயிக்கப்பட்ட வயது    எவ்வளவு? | 
காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியாக/ கணவனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 50 மற்றும் மகள் அல்லது மகனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 35 ஆகும். | 
| 9 | 
கருணை அடிப்படையில்    நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட    வயது எந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது? | 
காலஞ்சென்ற அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து  கணக்கிடப்படுகிறது. | 
| 10 | 
காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுகள்    ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரினால் யாருக்கு பணி நியமனம் வழங்கப்படும்? | 
காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியால்/ கணவனால் முன்மொழியப்படும் நபருக்கு வழங்கப்படும்,  ஆனால் மற்ற வாரிசுதாரர்களின் ஆட்சேபணையின்மைச் சான்றும் அவசியமானதாகும். | 
| 11 | 
என் தந்தை இறக்கும் தருவாயில் என் வயது 3,  என் தாயும் என் தந்தை இறந்த    ஓராண்டுக்குள் மறைந்து விட்டார்,  நான் இந்த வருடம் 10ஆம் - வகுப்பு தேர்வு    எழுதியுள்ளேன்,      என்    தந்தையின் வாரிசு என்பதால் கருணை    அடிப்படையில் பணிவாய்ப்பு எனக்கு வழங்க கோரி விண்ணப்பிக்கலாமா? | 
அரசு ஊழியர் மறைந்து 3 ஆண்டுகளுக்குள்    விண்ணப்பிக்க வேண்டும்,  எனினும் தாயும் இல்லாத காரணத்தால் இதனை ஒரு சிறப்பு    நேர்வாகக் கருதி ஏற்றுக்    கொள்ளலாம்,  ஆனால் கருணை    அடிப்படையில் அரசுப் பணியில் சேர குறும வயது 18 ஆகும். | 
| 12 | 
என் தந்தை இறக்கும்போது பன்னிரண்டாம் வகுப்பு  தேர்ச்சி பெற்றதினால் இளநிலை உதவியாளர் பணி    கோரியிருந்தேன்,  5 வருடங்களாகியும் இன்னும் பணி    வழங்கப்படவில்லை,     எனவே    இடைப்பட்ட காலத்தில் தட்டச்சு ஆங்கிலம். தமிழ் ஆகிய இரண்டிலும் முதுநிலை    தேர்ச்சி பெற்றுள்ளேன்,  நான் தட்டச்சர் பணி கோரி விண்ணப்பிக்கலாமா? | 
தட்டச்சர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும்    தொழில் நுட்பக் கல்வி பெற்றுள்ளபடியால் அப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்,  ஆனால் தட்டச்சர் பணியிடம்    காலியிருந்தால் மட்டுமே தட்டச்சர் பணியிடம் வழங்கப்படும், மொத்த காலியிடத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கருணை    அடிப்படையிலான பணி நியமனத்திற்கு வழங்கப்படும். | 
| 13 | 
கருணை அடிப்படையில் பணி நியமனம். இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு பணி வழங்க வேண்டுமென்பது கட்டாயமா? உரிமையுடன் கோரலாமா? | 
கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு என    நிர்ணயிக்கப் பட்டுள்ள அனைத்து சான்று - ஆவணங்கள் அரசாணை எண் 560. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை. நாள் 03.08.1977-இன் படி சமர்ப்பிக்கப்பட்டு. பணி நியமன அதிகாரிக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே பணிவழங்கப்படும்,  மறுக்கவும் அவருக்கு அதிகாரம்    உண்டு. | 
| 14 | 
கருணை அடிப்படையில் பணி நியமனம், காலிப் பணியிடமின்மை    காரணமாக எனக்கு மறுக்கப்படுகிறது,  ஆனால். வேலைவாய்ப்புத் துறை மூலம் 2 தற்காலிகப் பணியாளர்கள் பணியிலுள்ளார்கள், | 
தற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு.    அவ்விடம் நிரந்தரப் பணியிடமாக இருப்பின் தங்களுக்கு பணி வழங்கப்படலாம். | 
| 15 | 
திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர. சகோதாரிகளுக்கு    கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறதா? | 
திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர சகோதரிகளுக்கு    கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது. | 
| 16 | 
மருத்துவ இயலாமையின் காரணமாக மருத்துவரீதியில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வாரிசுதாரர்களுக்கு.    கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரும் விண்ணப்பத்துடன். மருத்துவ    இயலாமையால் ஓய்வு பெறும் அரசு ஊழியரின்    எந்தெந்த சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்? | 
கருணை அடிப்படையில் பணி நியமனம் கோருவதற்கு தேவையான சான்று / ஆவணங்களுடன் கீழ்க்காணும் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.
- மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவர் மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறுவதற்கு மருத்துவக் குழுவினரால் அளிக்கப்படும் மருத்துவ குழுச்சான்று (அசல்).
 
- அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தில் அவர் எந்நாளிலிருந்து மருத்துவ இயலாமையால் ஒய்வு பெறுகிறார் என்பதற்கு அத்துறைத் தலைவரால் வழங்கப்படும் சான்று.
 
- மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டின் நகல். 
 
  |