தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-இன் படி, தகவல் அறிய விழைவோர் பின்வரும் விவரங்கள் தொடர்பான தகவல்களுக்கு சம்மந்தப்பட்ட துறைகளின் பொதுத் தகவல் அலுவலர் / சார் செயலாளருக்கு முகவரியிட்டு மனு அனுப்ப வேண்டும். மேல்முறையீடு செய்ய விரும்புவோர் சம்மந்தப்பட்ட மேல்முறையீட்டு அலுவலருக்கு முகவரியிட்டு மனு அனுப்ப வேண்டும்.
| வரிசை எண் | பொருள் | தொடர்புடைய துறை | தொடர்புடைய மேல்முறையீட்டு அலுவலர் (P.I.O) | தொடர்புடைய பொது தகவல் அலுவலர் (A.A) |
|---|---|---|---|---|
| 1 | விதிகள், அறிவிக்கைகள், கல்வித்தகுதி, தேர்வுத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் ஏனைய தகுதிகள் பற்றிய விவரங்கள் | விதிகள் மற்றும் அறிவிக்கைகள் துறை | சார் செயலாளர் (RND) | இணைச் செயலாளர்/துணை செயலாளர் |
| 2 | விண்ணப்பம் சமர்ப்பித்தல் மற்றும் விண்ணப்பம் தொடர்பான தகவல்கள் | விண்ணப்பங்கள் பரிசீலிக்கும் துறை | சார் செயலாளர் (APD) | இணைச் செயலாளர்/
துணை செயலாளர் |
| 3 | வினாத்தாள்கள், விடைகள் மற்றும் தொடர்புடைய தகவல்கள் | மந்தணத் துறை | சார் செயலாளர் (QD) | இணைச் செயலாளர்/துணை செயலாளர் |
| 4 | விடைத்தாள்கள் மதிப்பீடு மற்றும் தொடர்புடைய விவரங்கள் | மதிப்பீட்டுத் துறை | சார் செயலாளர் (ED) | இணைச் செயலாளர்/துணை செயலாளர் |
| 5 | நேர்முகத் தேர்வு பதவிகளின் தெரிவு மற்றும் தொடர்புடைய விவரங்கள் | நேர்முகத் தேர்வு துறை | சார் செயலாளர் (OTD) | இணைச் செயலாளர்/துணை செயலாளர் |
| 6 | நேர்காணல் அல்லாத பதவிகளின் தெரிவு, திறந்த தரவு கொள்கை மற்றும் தொடர்புடைய விவரங்கள் | தெரிவுக்குப் பிந்தைய நடவடிக்கைகள் துறை | சார் செயலாளர் (PSD) | இணைச் செயலாளர்/துணை செயலாளர்ர் |
| 7 | துறைத் தேர்வுகள் பற்றிய விவரங்கள் | துறைத் தேர்வுகள் துறை | சார் செயலாளர் (DTD) |
இணைச் செயலாளர்/
துணை செயலாளர் |
| 8 | துறை ரீதியான பதவி உயர்வு மற்றும் அலகு / துறை மாறுதல் இசைவு வழங்குதல் பற்றிய விவரங்கள் | இசைவு மற்றும் துறை ரீதியான பதவி உயர்வு துறை | சார் செயலாளர் (CD) | இணைச் செயலாளர்/துணை செயலாளர் |
| 9 | ஒழுங்கு நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் | ஒழுங்கு நடவடிக்கைத் துறை | சார் செயலாளர் (DCD) | இணைச் செயலாளர்/துணை செயலாளர் |
| 10 | மாண்புமிகு தேர்வாணையம், அலுவலர்கள், ஊழியர்கள் தொடர்புடைய பணிவிவரங்கள் மற்றும் அனைத்து தபால்கள் பற்றிய விவரங்கள் | பணியாளர் துறை | சார் செயலாளர் (PD) | இணைச் செயலாளர்/துணை செயலாளர் |
| 11 | தேர்வாணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட / தேர்வாணையத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து நீதிமன்ற வழக்குகள் பற்றிய விவரங்கள் | சட்டப்பிரிவுத் துறை | சார் செயலாளர் (LCD) | இணைச் செயலாளர்/துணை செயலாளர் |
| 12 | தேர்வு நடைமுறைகளை கண்காணித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் பணிகள், தேர்வு பணிகளுக்கு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்தல், ஒப்பந்தங்கள் தொடர்பான விவரங்கள் | கூர்நோக்கல் மற்றும் ஒருங்கிணைப்புத் துறை | சார் செயலாளர் (MCD) | இணைச் செயலாளர்/துணை செயலாளர் |
| 13 | அலுவலக கட்டிடத்தின் முழு வளாகம், இயந்திரங்கள், வாகனங்கள் மற்றும் பதிவுருக்களைப் பராமரித்தல் | பராமரிப்புத் துறை | சார் செயலாளர் (MD) |
இணைச் செயலாளர்/
துணை செயலாளர் |
| 14 | தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான மனுக்கள் பற்றிய விவரங்கள் | தகவல் அறியும் உரிமைச் சட்டத்துறை | சார் செயலாளர் (RID) | இணைச் செயலாளர்/துணை செயலாளர் |
| 15 | வரவு செலவு திட்ட மதிப்பீடு, ஒப்பாய்வு, அனைத்து படிகள், தன்வைப்புக்கணக்கு பற்றிய விவரங்கள் | படிகள் மற்றும் பற்றுச்சீட்டுத் துறை | கணக்கு அலுவலர்/உதவி கணக்கு அலுவலர் (BRD) | இணைச் செயலாளர்/துணை செயலாளர் |
| 16 | தேர்வுக்கூடங்களை கண்டறிதல், தலைமைக்கண்காணிப்பாளர்களை நியமித்தல் மற்றும் அது தொடர்பான பணிகள் பற்றிய விவரங்கள் | உட்கட்டமைப்புத் துறை | சார் செயலாளர் (ID) |
இணைச் செயலாளர்/
துணை செயலாளர் |
| 17 | ஒளிக்குறி உணரி வகை மற்றும் விரிந்துரைக்கும் வகைத் தேர்வுகளுக்கான விடைத்தாள்களை அச்சிடுதல் பற்றிய விவரங்கள் | சரிபார்த்தல் மற்றும் எழுதுபொருள் துறை | சார் செயலாளர் (VSD) |
இணைச் செயலாளர்/
துணை செயலாளர் |
| 18 | தேர்வர்களிடம் இருந்து பெறப்படும் குறைகள் தொடர்பான மனுக்கள் பற்றிய விவரங்கள் | குறைகள் தீர்வு துறை | சார் செயலாளர் (GRD) | இணைச் செயலாளர்/துணை செயலாளர் |

