கூட்ட அமைப்பாளர் பொறுப்பிலுள்ள அலுவலர்கள் அந்தந்தத் துறையிலுள்ள பதவிகளுக்கான விதிகளின்படி தகுதியான அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிப்பது தொடர்பான? குறிப்புகளையும்? கருத்துருக்களையும் தயாரித்து பதவி உயர்வுக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு கமுக்கமாக சுற்றுக்கனுப்புதல் வேண்டும்.

கூட்ட நடவடிக்கை குறிப்புகள்:

கூட்டுநரால் கூட்ட நடவடிக்கைக் குறிப்பு தயாரிக்கப்பட்டு, தலைவரால் ஒப்பளிக்கப்பட வேண்டும். ஒப்பளிக்கப்பட்ட நடவடிக்கைக் குறிப்பு தேர்வாணையச் செயலரால் அனுப்பி வைக்கப்பட வேண்டும். பதவி உயர்வுக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைக் குறிப்புகள் தேர்வாணையத்தின் இறுதிக் கருத்தாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இது குறித்து தேர்வாணையத்தின் தனியான கருத்து ஏதும் பெறப்பட வேண்டியதில்லை.

பல்வேறு துறைகளுக்கான திட்ட அட்டவணை:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுத் திட்டங்கள் தொடர்பான பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையால் வெளியிடப்பட்ட 12.06.1985 நாளிட்ட அரசாணை எண்.603 மற்றும் 21.04.1994 நாளிட்ட அரசாணை (நிலை) எண். 97-இல் வெளியிடப்பட்டுள்ள திருத்தங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

முறையான பட்டியல்கள்:

முறையான பதவி உயர்வுப் பட்டியல்கள் மட்டுமே பதவி உயர்வுக் குழுவால் பரிந்துரை செய்யப்படும்.