குறிப்புகள் தயாரிப்பதற்கான சரிபார்ப்புப் படிவம்

1. பதவி மற்றும் பணியின் பெயர்
2. எந்த வருடத்திற்கான பட்டியல் முந்தைய பட்டியலை தொடர்ந்துள்ளதா?
3. அ. அறுதி நாள் (Crucial date)
ஆ. பட்டியல் காலம்
இ. 5 ஆண்டு சரிபார்ப்புப் காலம்
4. காலிப் பணியிட எண்ணிக்கை (காலியிட மதிப்பீட்டு படிவமும் காலியிட மதிப்பீட்டு ஏற்பளிப்பு ஆணை நகலும் இணைக்கப்பட வேண்டும்)
குறிப்பு பட்டியல் காலம் முடிந்து விட்டால் முறையான காலிப் பணியிடம் மட்டும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.
5. அறுதி நாளின்படியான பணிவிதிகளின்படி (ஏற்பளிக்கப்பட்ட விதிகளின் நகல் இணைக்கப்பட வேண்டும்.
அ. பணியமர்த்தும் முறை
ஆ. தகுதி
இ. இட ஒதுக்கீடு முறை பொருந்துமா (ஆம் அல்லது இல்லை) (ஆம் எனில் விவரங்கள் கொடுக்கப்பட வேண்டும்)
6. அறுதி நாளின்படி? பணி பட்டியல் அளிக்கப்பட்டுள்ளதா? (அரசாணை (நிலை) எண்.368/ நாள் 18.10.1993-இல் உள்ளவாறு இருக்க வேண்டும்.
7. முந்தைய பட்டியலில் ஏற்பளிக்கப்பட்ட கடைசி அலுவலரின் பெயர் (முந்தைய பட்டியல் வெளியிடப்பட்ட அரசாணை நகல் இணைக்கப்பட வேண்டும்.
8. தகுதி பெறாத (Not qualified) அலுவலர் விவரம்
அ. முந்தைய பட்டியலுக்கு தகுதி பெறாதவர்
ஆ. தற்போதைய பட்டியலுக்கு தகுதி பெற்றுள்ளனரா?
9. முந்தைய பட்டியலில் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக தள்ளி வைக்கப்பட்பட்டோர் (Deferred),/ விவரம்
ஒழுங்கு நடவடிக்கையின் தற்போதைய நிலை
10. அ. முந்தைய பட்டியலில் சேர்க்க பொருத்தமற்றவராக (Not Fit) கருதப்பட்டோர் விவரம்
ஆ. தற்போதைய பட்டியலில் கருதப்படகூடியவரா?
11. குழுவின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய மொத்த அலுவலர்களின் எண்ணிக்கை (முதுநிலைப் பட்டியல் வ.எண்…........ முதல் ...... வரை) (தகுதி பெற்றுள்ள அனைத்து அலுவலர்களுக்கும் படிவம்/2/இல் விபரங்கள் அளிக்கப்பட வேண்டும்)
12. அவர்களுள்/
அ. தகுதி பெறாதோர் (Not qualified)
ஆ. தற்காலிக பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெற்றவர்கள்
இ. தற்காலிக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றவர்கள்
ஈ. பதவி உயர்வு துறப்பு செய்தோர் , பதவி விலகியோர் விவரம் (ஏற்பளிக்கப்பட்ட ஆணையின் நகல் இணைக்கப்பட வேண்டும்)
உ. ஒழுங்கு நடவடிக்கை விதி 17 (ஆ)/ வின்படி; குற்றச்சாட்டு நிலுவை காரணமாக தற்போதைய கருத்துருவில் தள்ளி வைக்கப்பட வேண்டியோர் விவரம்? குற்றச்சாட்டு குறிப்பாணை நகல் இணைக்கப்பட வேண்டும்  
13. குறிப்பிட்ட படிவத்தினுடனான கூடுதல் விவரங்கள்
(Additional particulars to Format-I)
14. துறைத்தலைவரின் பரிந்துரை உள்ளதா? அரசின் நிர்வாகத் துறை பரிந்துரை உள்ளதா? பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் பரிந்துரை உள்ளதா?
15. குறிப்புகடங்கிய விவரங்களும்? பதிவெண்களும் சான்றிடப்பட்டுள்ளதா
16. கருத்துரு குறிப்ழுகள் (Booklets) 5 நகல்கள் பெறப்பட்டுள்ளதா?
17. அலுவலர்களின் பதிவுருத்தாள் , மந்தணக்கோப்பு இணைக்கப்பட்டுள்ளதா?

18. சான்றுகள்

  • 1. இக்கருத்துருவில் விதிகளின்படி தகுதி பெற்ற அனைவரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன என்றும், தகுதியுடைய எவர் பெயரும் விடுபடவில்லை என்றும் சான்றளிக்கப்படுகிறது.
  • 2. இன்றைய நாளில் நடைமுறையில் உள்ள அறிவுரைகளுக்கிணங்க காலியிட மதிப்பீடு கணக்கிடப்பட்டுள்ளது.
  • 3. அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரங்கள் விடுபடாமல் அவரவர் பதிவுறுத்தாளில் பதியப்பட்டுள்ளன. மந்தணக்கோப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • 4. முதுநிலை பட்டியலில் உள்ள அலுவலர்களின் பெயர்கள் முதுநிலை வரிசைப்படி சரியாக உள்ளன.
  • 5. ஊட்டு வகைப் பதவியில் உள்ள முறையான பணியாளர்களில் தகுதி காண் பருவம் முடியாதவர்கள் (Approved Probationers) மட்டும் கருத்துருவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.