கட்டணமில்லா தொலைபேசி தொடர்பு எண்:
1800 419 0958
மின்னஞ்சல் முகவரி :
contacttnpsc[at]gmail[dot]com
 • தொலைபேசி வாயிலாக

  தொலைபேசி வாயிலாக பொது தகவல் கோரி தொடர்பு கொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு உரிய தகவல்கள் குறை தீர்க்கும் மையத்தால் உடனடியாக அளிக்கப்படும். மாறாக நுட்பமான தகவல் கோரி தொடர்பு கொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு உரிய தகவல்கள் தொடர்புடைய பிரிவிலிருந்து பெற்று குறை தீர்க்கும் மையத்தினால் தெரிவிக்கப்படும்.
 • நேரடியாக

  1.  வாய்மொழி தகவல் / தெளிவுரை:-:
   பொது தகவல் கோரி நேரடியாக தொடர்பு கொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு உரிய தகவல்கள் குறை தீர்க்கும் மையத்தினால் உடனடியாக அளிக்கப்படும். மாறாக நுட்பமான தகவல் கோரி தொடர்பு கொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு உரிய தகவல்கள் தொடர்புடைய பிரிவிலிருந்து பெற்று தெரிவிக்கப்படும்..
  2. எழுத்துப்பூர்வமான கோரிக்கை / மனு:-
   விண்ணப்பதாரர் / மனுதாரர் கோரிக்கை / மனு அளிக்கும்பட்சத்தில், மின்னஞ்சல் முகவரி அம்மனுவில் குறிப்பிடப்பட வேண்டும். அதற்கு உரிய தகவல்களைத்தொடர்புடைய பிரிவிலிருந்து பெற்று அதனை மின்னஞ்சல் வழியாகவே விண்ணப்பதாரர் / மனுதாரருக்குத்தெரிவிக்கப்படும்.
 • அஞ்சல் வாயிலாக

  அஞ்சல் வழியாக விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்படும் மனு / கடிதங்கள் தொடர்புடைய பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதற்குறிய தகவல்கள் தொடர்புடைய பிரிவின் மூலம் நேரடியாக விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அஞ்சல் வாயிலாக குறைதீர் மனுக்களை அனுப்பும் விண்ணப்பதாரர்களுக்கான பொது வழிமுறைகள் :

  1. குறைதீர் மனுக்களை அனுப்பும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்டவாறு முகவரியிட அறிவுறுத்தப்படுகிறார்கள்
   • பின்வரும் வகையிலான குறைதீர் மனுக்கள் செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அவர்களுக்கு,
    • தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிவிக்கைகள்
    • சான்றிதழ் சரிபார்ப்பு
    • கலந்தாய்வு செயல்முறை
    • வாய்மொழி தேர்வு
    • காத்திருப்போர் பட்டியல் செயல்படுத்துதல்
    • மற்ற பொதுவானவை
   • பின்வரும் வகையிலான குறைதீர் மனுக்கள் தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அவர்களுக்கு,
    • இணையவழி விண்ணப்பங்கள்
    • நுழைவுச்சீட்டு தொடர்பாக
    • வினாத்தாள்கள் தொடர்பாக
    • தேர்வு முடிவு வெளியீடு
    • தேர்வு தொடர்பான மற்றவை
 • மின்னஞ்சல் வாயிலாக

  மின்னஞ்சல் வாயிலாக பொதுத்தகவல் கோரி தொடர்பு கொள்ளும் விண்ணப்பதாரர் / மனுதாரர்களுக்கு உரிய தகவல்கள் குறைதீர்க்கும் மையத்தால் அன்றைய தினமே மின்னஞ்சலில் அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் நுட்பமான தகவல் கோரும் நிலையில் விண்ணப்பதாரர்களுக்கு உரிய தகவல்கள் தொடர்புடைய பிரிவிலிருந்து அதற்கென குறிப்பிடப்பட்ட தகவல் பெறப்பட்டு விண்ணப்பதாரர் / மனுதாரருக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரிவிக்கப்படும்.