அடிப்படை சட்டக் கூறும் அதன் கோட்பாடும்

இந்தியஅரசமைப்புச் சட்டப் பிரிவு.320(3)(ஆ) Article 320(3) (b)-இன் படி அரசுப் பணியாளர்களுக்கான பணியமர்த்தல் பதவி உயர்வு/ பணி மாறுதல் ஆகிய இனங்களில் பின்பற்றப்பட வேண்டிய அடிப்படை கொள்கைகள் தொடர்பாகவும் அம்முறைகளில் பணியமர்த்தப்படுபவர்களின் பொருத்த நிலை (suitability) குறித்தும் தேர்வாணையத்தைக் கலந்தாலோசிக்க வேண்டும்.

பதவி உயர்வுக் குழு அமைக்கப்பட்டதற்கான நோக்கமும் அரசாணையும்:

பல்வேறு துறைகளில் ஏற்படும் காலிப் பணியிடணங்களில் பணியாளர்களை பதவி உயர்வு முறை மூலமும், பணிமாறுதல் முறை மூலமும் நிரப்புவதற்கு காலதாமதத்தைத் தவிர்க்கவும், உரிய அலுவலர்கள் ஒரே இடத்தில் கூடி விரைந்து முடிவெடுக்கவும் ஏதுவாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் 12.01.1994 நாளிட்ட அரசாணை எண்.15-இல் பதவி உயர்வுக் குழுக்களை அமைத்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.