நியமனம்

 • எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் வடிவிலமைந்த நேர்முகத்தேர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய தெரிவு முறை கொண்ட பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பதாரர்களை தெரிவு செய்யும் பணியினை நேர்காணல் தேர்வுத் துறை மேற்கொண்டு வருகிறது.
 • இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 320 (1). மாநில அரசுப் பணிகளில் நியமனம் செய்யும் பொருட்டு தேர்வுகளை நடத்துவதற்கு தேர்வாணையத்திற்கு அதிகாரம் அளித்துள்ளது.
 • எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர். நேர்முகத்தேர்வு நடைபெற உள்ள நாள், நேரம், இடம் ஆகியவை குறித்த விவரங்களை விண்ணப்பதாரர்களுக்கு தெரிவித்தல்.
 • நேர்காணல் தேர்வு நடைபெறும் நாளன்று விண்ணப்பதாரர்களின் மூலச் சான்றிதழ்களை சரிபார்த்தல்
 • ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கான தெரிவில். விண்ணப்பதாரர்களின் பதவி முன்னுரிமை விவரங்களைப் பெறுதல்.
 • தேர்வுகள் நிறைவுற்ற பின்னர், விண்ணப்பதாரர்கள், முதன்மை எழுத்துத் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படுகிறது, அவ்வாறு தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் தேர்வாணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டு, தேர்வாணைய இணையதளத்திலும். தேர்வாணைய அலுவலக அறிவிப்புப்பலகையிலும் வெளியிடப்படுகிறது.
 • பின்னர் ஆணையத்தின் ஒப்புதலைப் பெறும் பொருட்டு தெரிவுப் பட்டியல், காப்புப் பட்டியல் ஆகியவை தயாரிக்கப்படுகிறது, தேர்வாணையத்தின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் மேற்படி பட்டியல்கள் தேர்வாணைய இணையதளத்திலும், தேர்வாணைய அலுவலக அறிவிப்புப்பலகையிலும் வெளியிடப்படுகிறது.
 • மேற்படி விபரம். முன்னணி தமிழ் மற்றும் ஆங்கில நாளேடுகளில், செய்தி, மக்கள் தொடர்புத் துறை இயக்குநரகம் வாயிலாக வெளியிடப்படுகிறது.
 • தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் விவரங்கள் அடங்கிய தெரிவுப் பட்டியல். அரசு / துறைத் தலைவருக்கு பணி நியமன ஆணை வழங்கும் பொருட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் இவ்விவரம் தெரிவிக்கப்படுகிறது.
 • மேலும், காப்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்றும் தெரிவு செய்யப்படாத விண்ணப்பதாரர்களுக்கும் அவ்விவரங்கள் தெரிவிக்கப்படுகிறது.
 • விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட வேண்டிய சான்றிதழ்களை எதிர்நோக்கியும். விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி. இணையான கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்கள் குறித்த சரிபார்ப்பு அறிக்கையினை எதிர்நோக்கியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் விவரங்கள் தொடர்புடைய விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
 • விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட வேண்டிய சான்றிதழ்களை எதிர்நோக்கியும். விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி. இணையான கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்கள் குறித்த சரிபார்ப்பு அறிக்கையினை எதிர்நோக்கியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் விவரங்கள் தொடர்புடைய விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
 • தெரிவு முடிவு நிறுத்தி வைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட வேண்டிய சான்றிதழ்கள், சரிபார்ப்பு அறிக்கைகள் ஆகியவற்றைப் பெற்று, ஆணையத்தின் ஒப்புதல் பெறப்படுகிறது. மேற்படி இனங்களில், தெரிவு முடிவுகள் வெளியிடப்பட்டு, அவர்கள் தொடர்பான விவரங்கள் அரசு / துறைத் தலைவருக்கு பணி நியமன ஆணை வழங்கும் பொருட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது,
 • தேவைப்படும் இனங்களில், விண்ணப்பதாரர்களின் இனம் / மதம் / சொந்த ஊர் ஆகியவை குறித்த உண்மைத்தன்மையை அறியும் பொருட்டு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் / மாவட்ட விழிப்புணர்வுக் குழு / மாநில கூர் நோக்குக் குழு ஆகியவற்றிடமிருந்து விசாரணை அறிக்கை பெறப்பட்டு மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வினங்களில் மேற்படி விசாரணை அறிக்கையினை எதிர் நோக்கி. தற்காலிகமாக பணி நியமன ஆணை வழங்கும் பொருட்டு, மேற்படி விண்ணப்பதாரர்களின் பெயர் மற்றும் இதர விவரங்கள் அரசு / துறைத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
 • தேவைப்படும் இனங்களில், ஆதரவற்ற விதவை தொடர்பான ஆய்வு அறிக்கைகள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர்களிடமிருந்து பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
 • தெரிவு செய்யப்பட்டவர்களின் விவரங்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செய்தி அறிப்பிதழில் வெளியிடத் தேவையான நடவடிக்கைகளையும் நேர்காணல் தேர்வுத் துறை மேற்கொள்கிறது.

இவை தவிர, இத்துறை கீழ்க்காணும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

 • தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-இன் கீழ் கோரப்படும் விவரங்கள் அனைத்தும் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளவாறு தகவல் கோருபவர்களுக்கு வழங்கப்பட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மிகச் சிறப்பான வகையில் செயல்படுத்தப்படுகிறது,
 • அவ்வாறே, மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவிலிருந்து பெறப்படும் மனுக்களுக்கும் உரிய பதில் அனுப்பப்படுகிறது. முதுநிலையை மாற்றம் செய்யக் கோருதல். பிறந்த தேதியை மாற்றம் செய்யக் கோருதல் ஆகிய நிகழ்வுகளில் அரசு / துறைத் தலைவர் கோரும் விளக்கங்கள் / கருத்துகள் ஆகியவற்றை வழங்குதல்,
 • குறை தீர்க்கும் நடுவம், மின் அஞ்சல் ஆகியவற்றின் வாயிலாக விண்ணப்பதாரர்கள் கோரும் தகவல்களை வழங்குதல். மேலும், நேரிடையாக தேர்வாணைய அலுவலகத்திற்கு வரும் விண்ணப்பதாரர்களின் குறைகளும் கேட்டறியப்பட்டு குறைகளுக்குத் தீர்வு காணப்படுகிறது.